தீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய

தீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெலியத்தவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடத்தில் ஏறியவுடன், இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனால்தான் இந்த நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைத்தூக்கியுள்ளது. 30 வருடங்களாக நாட்டில் நிலவிவந்த தீவிரவாதத்தை முற்றாக இல்லாதொழித்த எம்மால் மட்டுமே, மீண்டும் தீவிரவாதத்தை இல்லாது செய்ய முடியும்.

இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவேன்.

புலனாய்வுத் துறையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக மீண்டும் மக்களுக்கு பாதுகாப்பானதும் நிம்மதியாக வாழக்கூடியதுமான நாட்டை நாம் வழங்குவோம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்