முல்லைத்தீவு மணவர்கள் உயர்ந்த நிலையை அடையககூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்யப்படுகின்றதா

முல்லைத்தீவு மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு சதிச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு – வித்தியானந்தகல்லூரியில் கடந்த ஒருவருட காலமாக அதிபர் நியமனம் செய்யப்படாத நிலையில்,

கல்லூரிக்கு அதிபர் நியமனம் செய்யக்கோரி, பாடசாலையின் பழைய மணவர்கள், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுடைய பெற்றோர், மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து கவனயீர்பு நடவடிக்கை ஒன்றினை 22.10.2019 இன்றைய நாள் முன்னெடுத்திருந்தனர்.

இக் கவனயிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வித்தியானந்த கல்லூரி என்பது, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய பாடசாலையாகும்.

கடந்த ஒரு வருடகாலமக இந்த பாடசாலைக்கு அதிபர் நியனம் கிடைக்கவில்லை.

முன்பு இருந்த அதிபருடைய ஓய்வு நிலைக்குப் பின்னர், இன்றுவரையில் ஒரு வருடகாலமாகியும் அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது ஒரு சாபக்கேடாக இருக்கின்றது.

அப் பாடசாலையில் குறிப்பாக 1300மாணவர்களுக்கு மேல் கல்விகற்கும் நிலையில், தந்தை இல்லாமல் குடும்பம் ஒன்று தத்தளிக்கும் நிலையைப்போன்ற ஒரு நிலையில்தான் வித்தியானந்த கல்லூரியில் கல்விபயிலும் மாணவர்கள் அதிபர் இல்லாத நிலையில் இருக்கின்றனர்.

ஒரு பாடசாலைக்கு அதிபரின் தேவை என்பது மிக முக்கியானது. பாடசாலையினுடைய ஒழுக்கம் சார்ந்த விடயங்கள், மற்றும் நிர்வாகத் திறன் சார்த விடயங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், என்பவற்றுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் அதிபருடைய தேவை என்பது மிக முக்கியமானது.

பலதடவைகள் வித்தியானந்த கல்லூரியின் நிரவாகத்தினர் இது தொடர்பில் உரியவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும், உரிய தகுதியான அதிபர் நியமனம் செய்யப்படவில்லை.

இந் நிலையிலேயே பாடசாலையின் பழைய மணவர்கள், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுடைய பெற்றோர், மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து கவனயீர்பு நடவடிக்கை ஒன்றினை 22.10.2019 இன்றைய நாள் முன்னெடுத்திருக்கின்றனர்.

இவாவிடயத்தில் முக்கியமாக ஒரு கருத்தினைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எங்கேயாவது தென்னிலங்கையிலுள்ள ஒரு தேசிய பாடசாலையில் ஒருவருடகாலமாக அதிபர் நியமனம் செய்யப்படாத பாடசாலை ஏதாவது இருக்கின்றதா என்பதை சம்பந்தப்படடவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.

எங்களுடைய தமிழ் மணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளைத்தான் சிலர் செய்கின்றார்களா என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியிலே எழுகின்றது.

ஏன்எனில் வித்தியானந்த கல்லூரி என்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மையான பாடசாலை என்பதுடன் ஒரு தேசிய பாடசாலையாகும்.

இவ்வாறான ஒரு பாடசாலைக்கு ஒருவருடகாலமாக அதிபர் நியமனம் வழங்கப்படாது காலம் தாழ்த்துவதென்பது, எங்களது மாணவர்களின் உயர்ச்சியில் ஒரு தாழ்வைக் கொண்டுவருவதாக செய்யப்படுகின்றதா, அல்லது முல்லைத்தீவு மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

எனவே உரியவர்கள் இவ்விடயத்தில் கவனம்செலுத்தி, இப் பாடசாலைக்கு உரிய தகமையுள்ள, ஒரு அதிபரை உடனடியாக நியமிக்கவேண்டும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்