ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வை மக்கள் பெற முடியும்- டக்ளஸ்

மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெறவேண்டுமானால் தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இடம்பெறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நீண்ட  கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது வழி ஏற்பட்டுள்ளது. அதுதான் இந்த ஜனாதிபதி தேர்தலாகும்.

எனவே இந்த தேர்தலில் மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் சரியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

அதனூடாக மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால்தான் மக்கள் வெற்றியடைந்தமைக்கு சமன்.

எனவே வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வெற்றியின் பங்குதாரர்களாக உங்களை மாற்றிக் கொண்டு நீங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒரு காலத்தில் பிரச்சினைகளுக்காக ஆயுதங்களை தூக்கினோம். ஆனால் அந்த போராட்டம் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே ஆட்சி மாற்றம் ஒன்று வருமாக இருந்தால் உடனடியாக  உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

அத்துடன் உங்களுக்கு வளமான வாழ்வாதாரமும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்