வவுனியாவில் குடும்ப பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்றதால் விபரீதம்: சிறைக்காவலர் – இளைஞர்களுக்கிடையே மோதல்

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதிக்கு குடும்ப பெண் ஒருவரை சிறைச்சாலை காவலர் அழைத்துச் சென்றமையால் சிறைச்சாலை காவலருக்கும், இளைஞர்களுக்குமிடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (22.10.2019) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு ஈரட்டைப்பகுதியில் இருந்து குடும்பபெண் ஒருவரை மோட்டர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர் ஒருவர் சென்றுள்ளார்.

மோட்டர் சைக்கிளில் குறித்த பெண் செல்வதை அவதானித்த பெண்ணின் மகனும், கணவனும் குறித்த மோட்டர் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றனர். மோட்டர் சைக்கில் விடுதிக்குள் நுழைந்த போது அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது சிறைச்சாலை காவலர் எனக் தெரிவிக்கப்படும் குறித்த இளைஞனுக்கும் அவர்களுக்கும் (பெண்ணின் மகன் , கணவர்) இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறைச்சாலை காவலர் தொலைபேசியில் இவ்விடயத்தினை தெரியப்படுத்தியமையினையடுத்து மேலும் பல சிறைச்சாலை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு நின்ற பெண்ணின் தந்தை மகன் மற்றும் இளைஞர்களுடன் முரண்பட்டனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்றபட்டதுடன் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியின் போக்குவரத்தும் 30 நிமிடங்களுக்கு மேல் தடைப்பட்டிருந்தது

இதனையடுத்து 119 பொலிசாருக்கு தொலைபேசியூடாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இரு பகுதியினரையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் இது தொடர்பான விசாரணைகளையும் வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்