ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1,359 முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1,359 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான காலப்பகுதியில் இவ்வாறு 1,359 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 1299 முறைப்பாடுகளும் வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 50 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 10 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்