3 பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுல்படுத்தியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம்

தேர்தல்கள் தொடர்பாக தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 26 பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுலாக்கி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று ஆரம்பித்தது.

கொழும்பைத் தளமாக கொண்டு நாட்டின் 9 மாகாணங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அந்த குழு மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், நேற்று இலங்கைக்கு வருகைத் தந்த 30 பேர் அடங்கிய குறித்த குழு கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டது.

இதன்போது உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் பிரதானி டிமிட்ரா ஐயானோ, தேர்தல்களுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டார்.

அதேநேரம் தேர்தல் நடைபெறும் வரையில் தமது குழு எந்தவிதமான பகிரங்க அறிவிப்புகளையும் வெளியிடாது என்றும், தேர்தல் நிறைவடைந்து இரண்டு தினங்களின் பின்னரே முதன்மை அறிக்கை வெளியாக்கப்படும் என்றும்; தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்