ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்துவேன்

ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்துவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக்கல்லூரியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘எமது நாட்டில் சர்வதேச மட்டத்திலான ஊடக வள பயிற்சி நிலையமொன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றேன்.

அதன் மூலம் நாட்டின் உள்ளக ஊடகத்துறையையும் வெளிநாடுகளிலுள்ள திறமையுள்ள ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து தொழில் ரீPயான தொடர்புகளை திருப்திகரமான நிலைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

சவால்களுக்கு மத்தியில் நாம் ஊடக கிராமம் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், ஊடகவியலாளர்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக முழுமையான கவனத்தை செலுத்தி, அந்த குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்