நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை – ஜனாதிபதி செயலகம்!

நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்னவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை பாதுகாப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போலியான திரிவுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் இதன்போது வலியுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்