களுகங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக அதனை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக அத்தனகல ஓயா, துனமலை பகுதியில் பெருக்கெடுத்துள்ளமையால் அந்த பகுதியில் சிறிதளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்