நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(செவ்வாய்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் பொருட்டு முப்படையினரை நாடு முழுவதும் அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்மாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன.

மேலும், கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருணாகலை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொணராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதற்குள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்