தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் முன்வைத்த கோரிக்கையினைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்