உயர் அழுத்த மின் கம்பத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவருக்கு நேர்ந்த சோகம்..!!

மின் கம்பத்தின் மீது கண்ணீா் அஞ்சலி ஒட்டுவதற்கு முயற்சித்த ஒருவா் மின்சாரம் தாக்கியதில் உயிாிழந்த சம்பவம் பலாங்கொடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலங்கொடை நகரத்தில் மக்கள் வங்கிக்கு அருகில் நேற்று மாலை இவர் மின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பலங்கொடைப் – பெலிஹூல்வோய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய டி. நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது உயிரிழந்த நபர் கண்ணீர் அஞ்சலி பதாகை ஒன்றை காட்சிப்படுத்த முற்பட்டுள்ளார்.இதன்போது குறித்த பதாகை அதிபலம் வாய்ந்த மின்கம்பியில் சிக்குண்டுள்ளது. பின்னர் மின்தாக்குதலுக்குள்ளான நபர் பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்