தமிழர்களின் ஆரம்பக்கல்வியை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

தமிழர்களின் கல்வி நிலையென்பது மிகவும்மோசமான நிலையினை அடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக தமிழர்களின் ஆரம்பக்கல்வியை வலுப்படுத்தவேண்டிய தேவையிருப்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் மாணவர்களுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் பணிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மேற்கொண்டுவருகின்றது.

வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நோக்காக கொண்டு இந்த பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மகிழூர் மற்றும் மகிழூர்முனை ஆகிய கிராமங்களில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான பாடசாலை பை மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று பகல் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் உள்ள 07முன்பள்ளிகளில் கல்வி பயிலும் சுமார் 200 மாணவர்களுக்கு புத்த கபை உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் உத்தமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்தில் தமிழர்கள் மத்தியில் நல்ல கல்வி சமூகத்தினை உருவாக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கல்வியால் இந்த நாட்டின் பல தலைமைபதவிகளை கொண்டிருந்த தமிழர்களின் இன்றைய நிலையினை நாங்கள் திரும்பிப்பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கல்வியில் சாதித்த சமூகம் இன்று அந்த நிலையினை எட்டமுடியாத காரணங்களை கண்டுபிடித்து நிவர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்