கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் ஊடக சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சயில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
தமது பொராட்டத்தினை வலுவிழக்க செய்யும் நோக்குடன் புதிதாக ஒரு தரப்பு வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொண்டு செயற்படுவதாகவு்ம, தமது போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் அவர்கள் செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த செயற்பாடு இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயற்பாடுகளிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை காலமும் தமது பிள்ளைகளிற்காக வீதிகளில் நின்று பொராட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் இன்றும் கண்ணீருடன் வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் பணத்திற்காக புாராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் சிலர் செயற்படுவதாகவும், அவர்களை இனம் கண்டு நடந்துகொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் போராட்டங்களில் பங்குகொள்ளாதவர்களைவைத்து குறித்த அமைப்பொன்றை உறுவாக்க வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாகவும் அவர் இதன்புாது தெரிவித்தார். இவ்வாறான நிலையில் எமது போராட்டம் இத்தனை காலமும் பல்வேறு இழப்புக்கள், சவால்களிற்கு முன்னொல் முன்னெடுத்து செல்லப்பட்டு இன்று சர்வதேச ரீதியில் எமது நியாயத்தினை கொண்டு சென்றுள்ள நிலையில் போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலேயே வெளிநாடுகளில் பணம் பெற்றும், அரசின் நிகழ்ச்சி நிரலிற்கமைவாகவும் சிலர் நடக்க முற்படுவதாகவும் அவர் இதன்புாது சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்