நான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

எதிர்வரும் 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று(புதன்கிழமை) காலை இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செலவீனங்களுக்காக 1474 பில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்யும் இடைக்கால குறைநிரப்பு பிரேரணையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான 4 மாத காலத்திற்கு அரச பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடங்கிய இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்