கோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்!

தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அவர் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட பயப்படத் தேவையில்லை.

பகிரங்க விவாதத்தின் மூலம் மக்கள் இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகள், பார்வைகளையும் ஒப்பிட்டு பார்க்க உதவியாக அமையும்” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்