ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று(புதன்கிழமை) முன்னிலையாகிருந்தார்.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்