இலங்கை மீனவர்களை விடுவிக்க மாபெரும் ஆர்பாட்டப் பேரணி…

இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும். என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டப் பேரணி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்.பிரதான வீதியிலுள்ள சமாசத்தின் முன்பாக ஒன்றுகூடிய மக்கள் அங்கிருந்து பேரணியாக யாழ் மாவட்ட அரச அதிபர் அலுவலகம், வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.  இதனைத் தொடர்ந்து மருதடி வீதியில் உள்ள இந்திய துணை தூதரகத்து சென்றனர்.
அங்கு பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு சிலர் இந்திய துணைத்தூதரகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்