லண்டனில் பரபரப்பு – இன்று காலை 39 சடலங்கள் மீட்பு

பிரித்தானியாவில் பாரவூர்த்தி ஒன்றிலிருந்து 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் – எசெக்ஸில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனிலிருந்து இளைஞன் ஒருவர் உட்பட 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல்கேரியாவில் தயாரிக்கப்பட்ட கொள்கலன், Welsh துறைமுகமான Holyhead வழியாக வார இறுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலைமை அதிகாரி Andrew Mariner தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் 25 வயதான வடக்கு ஐரிஷ் சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்து விட்டனர். என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த எங்கள் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“இது முற்றிலும் சோகமான சம்பவம்”, இந்த சம்பவத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என பிரித்தானிய உள்துறை செயலாளர் Priti Patel தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்