மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி!

மழையுடனான வானிலையால் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்குக் கொண்டுவரப்படும் மரக்கறிகள் 25 இலட்சம் கிலோகிராமுக்கும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான வானிலையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்