கோட்டாபய சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளமாட்டார் – மஸ்தான் நம்பிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிறுபான்மை சமூகத்தை புறம்தள்ளமாட்டார் என்பதில் தமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவிடம் சிறுபான்மை சமூகம் சார்ந்து, பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளோம்.

அதில் முக்கியமாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிகாட்டியதுடன், ஏனைய மாகாணங்களை போல வடமாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் என்பதனையும் எடுத்து கூறியுள்ளோம்.

அவ்வாறான விடயங்களை பூர்த்திசெய்து தருவதாக எமக்கு அவர் உறுதி மொழி கூறியுள்ளார். தற்போது சஜித் பிரேமதாசவை எந்த நிபந்தனைகளும் இன்றி ஆதரிப்பதாக சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன.

காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் சிறுபான்மை தலைவர்கள் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை.

இது தான் தற்போதைய நிலமை. அவ்வாறிருக்கையில் கோட்டாபயவை ஒரு இனவாதியாக முத்திரை குத்த அனைவரும் முனைந்து வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்