குடும்ப ஆட்சியூடாக மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரும்புகின்றது.

குடும்ப ஆட்சியூடாக மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன
முன்னணி விரும்புகின்றது. அதனால்தான் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக
ராஜபக்ஷ குடும்பம் களமிறக்கியுள்ளது இந்த முன்னணி யில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களில்
ஒருவர்கூட ஜனாதிபதி வேட்பாளர் ஆகும் தகுதியற்றவர்களாக இருப்பது நிரூபனமாகியுள்ளது.
தற்காலிக ஏற்பாட்டுக்கு கூட சமல் ராஜபக்ஷவைதான் களம் இறக்கினார்களே தவிர அதற்குகூட
லயக்கற்ற தலைவர்களே தமது அணியில் உள்ளனர் என்பதையும் அவர்களே பறைசாற்றி
விட்டார்கள் எனவே சுயநலம் கொண்ட இவர்களை தோல்வியடையச் செய்ய வேண் டியதே நமது பிரதான
கடமையாகும் எனத் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன் னாள் முதலமைச்சர் நஸிர்அஹமட்.
தேர்தல் பரப்புரை ஏற்பாடுகள் குறித்த அமைப்பாளர்கள் சந்திப்பு ஏறாவூரில் நடை
பெற்ற போதே அவர் இதனைத் தொவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

நாட்டின் அரசியல் குறித்த எந்தவொரு விடயங்களிலும் முழுமையான அறிவைக் கொண்டிராத
கோத்தாபாய ராஷபக்ஷா – அண்ணன் சொன்னார் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிட வந்துள்ளார். இப்படியானவர் எப்படி இந்த நாட்டி லுள்ள அனைத்து சமூகங்களின்
நிலைமைகளை உணர்ந்து செயற்படுவார் என்பது கேள்விக்குரியது அல்லவா?
எந்தவொரு விடயத்திலும் திட்டமிட்டு குழிபறிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படும்
எண்ணம் கொண்டவர்களாகவே இவர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த எண்ணச்
செயற்பாடுகளின் ஒர் அம்சம்தான் முஸ்லிம்; வேட்பாளர் ஓருவர் களமிறக்கப்பட்ட
பின்னணியாகும். இதே பாதையில்தான் தற்போது எமது தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும்
குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தநாட்டில் மிக நேர்மையான அரசியலை முன்னெடுப்பவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸினர் எனவே நாம் ஒருபோதும் குறுக்குவழி அரசியல்வாதிகளின் அடாவடித்
தனங்களுக்கு அடிபணிந்து போகமாட்டோம்.

இன்றைய நிலையில் எமக்கொரு பாரிய பொறுப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டின்
எதிர்காலத்தை சரிவர திட்டமிடக்கூடிய ஒரு அரசியல் தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டியவர்களாக
இருக்கின்றோம். இந்த கடமையை நாம் சரிவரச் செய்ய வேண்டும்- செய்வோம்.
எனவே நாட்டின் அரசியல்பற்றி எதுவுமே தெரியாத கோத்தாபாயவை புறம் ஒதுக்கி சஜித்
பிரமேதாஸாவை வெற்றிபெறச் செய்ய நாம் ஒரணி திரளவேண்டும் – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்