முறிகண்டி அக்கராயன் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி றிகண்டி அக்கராயன் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முறிகண்டியிலிருந்து அக்கராயன் ஊடாக மன்னால் யாழ் வீதியையும், ஏ9 வீதியையும் இணைக்கும் பிரதான வீதியாக குறித்த வீதி காணப்படுகின்றது. அக்கராயன் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த வீதியில் காணப்படும் முக்கிய பாலங்களில் ஒன்றான குறித்த பாலம் கடந்த 7 மாதங்களிற்கு மேலாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறி;த வீதி அபிவிருத்தி தொடர்பான மக்கள் காட்சி பதாதைகள் அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை. குறித்த வீதியின் ஒப்பந்த காலம், பெறுமதி உள்ளிட்ட விடயங்களளை மக்களிற்கு காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் குறித்த வீதி ஊடாக போக்குவரத்து பெரும் பாதிக்ப்பினைன ஏற்படுத்தி உள்ளது.

குறித்த வீதியில் கட்டுமான பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் மக்களின் அன்றாட போக்குவரத்திற்காக தற்காலிக பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு உரிய முறையில் மண் அணைக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியின் ஊடாக அக்கராயன், வன்னேரிக்குளம் ஆகிய வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் குறித்த வீதியை நம்பி பல கிராமங்களும் காணப்புடுகின்றது. மிகவும் இன்றியமையாத குறித்த வீதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த வீதியின் கட்டுமான பணிக்காக மாற்றுவழிப்பாதை காண்பிக்கப்பட்டுள்ள போதிலும் அது மிகவும் மொசமான நிலையில் காணப்படுகின்றது. குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த பாதையினால் மக்கள் மழை காலங்களில் பயணிதக்க முடியாத நிலை காணப்படுகுpன்றது. குறித்த பாலத்தின் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவு;ம, பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மக்களின் போக்குவரத்திற்கமைவாக சீர் செய்து தரப்பட வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேவேளை ஓர்அபிவிருத்தி பணி இடம்பெறும் பகுதியில் ஒப்பந்ததாரர், பெறுமதி, முடிவு காலம் உள்ளடக்கிய காட்சி பதாகையினையும் அப்பகுதியில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்