விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள்

விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த அகழ்வு பணிகள் இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே இவ்வாறு அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன. குறித்த காணியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியில் இன்றும் சற்ற நேரத்தில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டு அனுமதி வழங்கியதன் பின்னர் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் காணப்படுவதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்