கிளிநொச்சி மாவட்ட மூத்த பிரஜைகள் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட மூத்த பிரஜைகள் நிகழ்வு இன்று கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டதுடன. மாகாண மற்றும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளிநாச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சிறந்த சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் முதியோரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று கிளிநாச்சி மாவட்டத்தில் மாத்திரமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் முதியோர் இல்லங்கள் அதிகரித்தவாறே செல்கின்றது. பிள்ளைகள் தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாடுகளிற்கு செல்வது்ம, தமது பெற்றோரை முறையாக பாதுகாக்க தவறுவதும் இதற்கு காரணமாக அமைகின்றது. பெற்றோரை முதியுார் இல்லங்களில் விட்டுவிட்டு அவர்களை விசேட நாட்களில் விருந்தாளிகள் போன்று பார்வையிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பெற்றோரை பிள்ளைகள் சரியான முறையில் பார்ப்பதில்லை. இதற்கு பிரதான காரணமாக இருப்பது இன்றைய இளைஞர், யுவதிகள் தத்தமது சமய வழிபாடுகளை பின்பற்றுவதில்லை. அனைத்துமதங்களும் மனித வாழ்வில் நல்ல விடயங்களையே எடுத்து கூறுகின்றன. இன்றைய காலத்தில் பெற்றோர் ஆலயங்களிற்கு புறப்படும்போது இளைஞர்கள் வேறு காரணங்களை கூறி குடும்பத்தோடு செல்வதை தவிர்த்து வருகின்றனர். அனைவரும் தத்தமது மதங்களை முழுமையாக பேணினால் பெற்றோரை அவர்கள் மதிக்க பழகிக்கொள்வார்கள். அனைத்து மதங்களும் நல்ல விடயங்களையே கூறுகின்றன.
உலகத்தில் வாழும் மனித எண்ணிக்கையில் சுமார் 8 கோடி மக்களே முதியவர்களாக இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இந்த முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி மனிதனின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது. இலங்கையில் முதியவர்களிற்கான பல்வேறு செயற்திட்ட்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் அவை புாதுமானதாக இல்லை. அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவை காணப்படவில்லை என்பதனையும் அவர் இன்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடதக்கதாகும். இன்றும் குறிப்பிட்ட காலத்தில் இங்கு உள்ள அனைவரும் முதியவர்களாகிவிடுவோம். நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறைகளில்தான் அவர்கள் எம்மை பார்க்க கூடிய சூழல் ஏற்படும். பிள்ளைகள் பெற்றோரை பார்ப்பதை வைத்துதான் அவர்களின் பிள்ளைகள் அவர்கள் மீது கரிசனை காட்டப்போகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்