மலையகத்தின் பல பகுதிகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு மக்கள் திண்டாட்டம்.

மலையகத்தின் பல பகுதிகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் மக்கள் சமையல் எரிவாவினை தேடி நகரங்கள் எங்கும் திண்டாடி வருகின்றனர்.
சமையல் எரிவாயு கடந்த ஒரு வார காலமாக  டயகம, அக்கரபத்தனை ,மன்ராசி, ஹோல்புறுக், ,பொகவந்லா, நோர்வூட் மஸ்கெலியா, ஹட்டன், கொட்டகலை, தலவாக்லை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். தூர இடங்களில் இருந்து சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக கூலி வாகனங்களை எடுத்து கொண்டு ஹட்டனை நோக்கி வந்த போதிலும் இங்கு எரிவாயு பொதியளவு இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.

சமையல் எரிவாயு இல்லாததன்  காரணமாக பல தேநீர் கடைகள், உணவகங்கள்,இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையங்கள், மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர் வரும் தினங்களில் வரும் திபாவளி பண்டிகையினை கொண்டாட தமிழ் மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில் எரிவாயு இல்லாததன் காரணமாக
பலகாரங்கள் செய்வதில் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குடும்ப தலைவிகள் தெரிவிக்கின்றன.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக முச்சக்கரவண்டி ஓட்டு நர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.அதிகமான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் எரிவாயு ஏற்றிச் சென்றே தமது நாள் பிழைப்பினை நடத்துகின்றனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் ஒரு சில விற்பனை நிலையங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் குறைவாக் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், இந்த எரிவாறு சிலிண்டர்கள் காலை வேளையிலேயே முடிந்து விட்டதாகவும் விற்பனையார்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் பண்டிகை ஒன்று வரும் போது போதியளவு எரிவாயு பெற்றுக்கொடுக்காதிருப்பது கவலையளிப்பதாகவும் இது தொடர்பாக சம்பந்த பட்டவர்கள் பொறுப்பு கூற வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்