முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியசாலையில்

வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) உள்ள வங்கியொன்றில் தானியங்கி இயந்திரத்தில் பணத்தை எடுப்பதற்காக சென்று இறங்கியபோது படியில் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்