வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி குறித்த முக்கிய தகவல் வெளியானது!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி எதிர்வரும் சில தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்க அச்சக பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நடவடிக்கைகயை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் தற்பொழுது அச்சிடப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

கடும் பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் அச்சுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அச்சக பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் நீளம் 26 அங்குலமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்