சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை ஆரம்பம்

2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

சங்கீதம் (மேற்கத்தேய) பரீட்சை அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை தொடர்பான அட்டவணை சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதிப்பத்திரம் அவர்களது விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் பாடத்திருத்தம், மொழியில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிழைக்கு சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்