கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியீடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு – தாமரைத்தடாக கலையரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் பங்களாகி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்