யாழ் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தின் 34வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழா குழு கூட்டத்தின் போதே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

10 அமர்வுகளாக நடாத்தப்படவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 300 உள்வாரி பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 400 வெளிவாரிப் பட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், இம்முறை யாழ் பல்கலைக் கழகத்தின் கௌரவ கலாநிதி பட்டங்களைப் பெறவுள்ளவர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள், உப விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்