வரிகளில் இருந்து மக்களை விடுவிப்பேன்- சஜித்

வரிகளில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் சந்தோசமாக வாழ வழி ஏற்படுத்துவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தூய எண்ணங்களுடனும், பௌத்த மத நம்பிக்கையின் அடிப்படையிலும் நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன்.

இலங்கையை புதிதாக மாற்றுவதற்கு நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்தப் பயணத்தில் பல முடிவுகளும் ஆரம்பங்களும் வரும். ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பைகளில் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றார்கள் என்பதைப் நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கின்றோம்.

குடும்பம் சந்தோசமாக இருப்பதற்கு பணம் அவசியம். பூட்டான் இந்த விடயத்தில் சிறந்த முன்னுதாரணம். அவர்களுடைய மொத்த தேசிய உற்பத்தி அதிகம். அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். வரிகளில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் சந்தோசமாக வாழ வழி ஏற்படுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்