ஜனாதிபதி தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளால் சஜித்தை வெற்றி பெறச் செய்வோம்.

தோழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா சிவநேசன் சூளுரை.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் திகாம்பரத்துடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் லட்சக்கணக்கான வாக்குகளால் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை வெற்றிப்பெறச் செய்வோம். என இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா. சிவனேசனின் தெரிவித்தார்.

இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா. சிவனேசனின் பிறந்த தினத்தினையொட்டி இளைஞர்கள் கொட்டகலை டிரேட்டன் சித்தி விநாயகர் ஆலயத்தின் ஒழுங்கு செய்திருந்த பூஜை வழிபாடுகள் இன்று (25) ஆலய பிரதம குரு சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.அதனை  தொடர்ந்து ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் காலம் காலமாக குடும்ப ஆட்சியே நடைபெற்றுவருகிறது இந்நிலையில் தலைவர் திகாம்பரம் அவர்கள் பொகவந்தலா வெம்பா தோட்டத்தில் பிறந்த என்னை இனங்கண்டு அரசியலுக்கு கொண்டு பிரதேசசபை உறுப்பினராகவும்,இளைஞர் அணி தலைவராகவும் மாற்றியுள்ளார்.எனவே முதலில் அவருக்கு நான்றிக்கடமை பற்றுள்ளேன்.

தொழிலாளர் தேசிய சங்கத்தினை எடுத்துக்கொண்டால் அதில் வெளியிலிருந்து எவரும் வரவில்லை.அமைச்சர் திகாம்பரம் அவர்கள் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்தவர்,பாராளுமன்ற உறுப்பினர், எம்.திலராஜ் அவர்களும், மடக்கும்புர தோட்டத்தில் பிறந்தவர்.அது மாத்திரமன்றி மாகாண சபையை எடுத்து கொண்டாலும் சரி பிரதேச சபையினை எடுத்து கொண்டாலும் அனைவரும் தோட்டத்தைச் சார்ந்து லயத்தில் பிறந்தவர்கள்.அது மட்டுமல்லாது அமைச்சர் சஜித் பிரேமாதாச அவர்களை ஜனாதிபதி ஆக்க வேண்டும். என்று அரசாங்கத்திடம் முட்டி மோதி தீர்மானம் மேற்கொண்டவர்.ஆகவே அவருடன் நாங்கள் இளைஞர்கள் அனைவரும் இணைந்து பல லட்சக்கணக்கான வாக்குகளால் சஜித் பிரேமதாச அவர்களை வெற்றிபெறச் செய்து மலையகத்தில் அமைச்சர் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கு உருதுணையாக நிற்போம.; என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதேச சபை உறுப்பினர்களான ராஜமாணிக்கம்,ராம்,உட்பட இளைஞர்கள் பெருந்திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்