கிறிஸ்தவ மதத்தவரான சுமந்திரனுக்கு நீராவி பிள்ளையாரில் என்ன அக்கறை? ஞானாசாரர் இப்படிக் கேட்கின்றார்

இந்தநாட்டிலுள்ள தமிழ்மக்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. மாறாக, விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரனுக்கும் மட்டுமே பிரச்சினைகள் உள்ளன. கிறிஸ்தவரான சுமந்திரன், முல்லைத்தீவு நீராவியடி இந்து ஆலயத்தில் ஏன் அக்கறை காட்ட வேண்டும் என கேள்வி யெழுப்பியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்கலகொட அத்தேஞானசார தேரர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கில் தற்போது தனி அரசு காணப்படுகிறது. பிரிவினைவாதத்தை வளர்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை. தனிநாடு பற்றிப் பேசிச் சட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் நடை முறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

குருகந்த விகாராதிபதியின் இறுதிக்கிரியை களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளே குழப்பியடித்தனர். அங்கிருந்த தமிழ்ச் சகோதரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . குருகந்த தேரர் பொதுமக்களுக்குச் சேவைசெய்தவர். 11வருடமாக அந்தப் பகுதி மக்களுக்குச் சேவை செய்தாரே தவிர, தனக்காக எதையும் செய்யவில்லை.

வடக்கில் வேறொரு அரசே இருக்கிறது. இந்த அரசின் குதர்க்கமானஆட்சியின் காரணமாகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்த நாட் டில் இடமில்லாமல் போகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த நாட் டுக்கு விசுவாசமாக இருப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு, அநுராதபுரத்துக்கு அப்பால் சென்றவுடன் தனிநாடு பற்றி பேசுவது எந்த வகையில் நியாயமாகும்?

எங்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டம் பிரிவினைவாதிகளுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை. சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு அமுல்படுத்த பிரிவினைவாதிகளுக்கு ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை.

காலம்சென்ற பிக்குவின் இறுதிச்சடங் கில் பௌத்தர்கள் என்ற ரீதியில் செய்யவேண் டியதைச் செய்துவிட்டோம். கூட்டமைப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர்.

அதை நாமும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். குருகந்த தேரரின் உடல் 3 நாள்களுக்கு வைத்திருக்கும் வகையிலேயே பதப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பு தாமதமாகும் என்ற நிலையிலேயே மனிதாபிமான ரீதியில் இறுதி க்கிரியை மேற்கொண்டோம். நாட்டில் பல பகுதி களிருந்து 200 இற்கும் மேற்பட்ட பிக்குகள் முல்லைத்தீவுக்கு வந்திருந்தனர்.

இந்த விடயத்தில் நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். பல தடவைகள் சிறை சென்றுள்ளேன். இதற்காக ஒருபோதும் பயப்பட மாட்டேன். இந்த அரசு இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்திக் கொண்டு, வெட்கித் தலைகுனியக் கூடிய வகையில் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசுக்குள் இன்னொரு அரசு இருக்கிறது. பிரிவினைவாதிகள் அவர்களின் நடவடிக்கைகளை தொடர்கின்றனர். அவர்கள் மீது பொலிஸாரும் நடவடிக்கையெ டுப்பதில்லை .

வடக்கு- கிழக்கில் பிரிவினைவாதிகள் கடந்த சில வருடங்களாகவே வேரூன்றி விட்டனர். இங்கு குண்டாந்தடியால் மக்களைத் தாக்குவர். அங்கு வெறொரு அரசு செயற்படுவதால் குண்டாந்தடிப் பிரயோகம் அங்கு சரிவராது. இந்த பிரிவனைவாதிகளைத் தடுக்காவிட்டால் மீண்டும் இருண்டயுகத்துக்குள் செல்லநேரிடும். இதனால் தமிழ், சிங்கள மக்களே பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்மக்களிற்கு இங்கு எந்த பிரச்சினையுமில்லை. விக்னேஸ்வரனிற்கும், சுமந்திரனுக்கும் மட்டுமே பிரச்சினைகள் உள்ளன. சுமந்திரன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இந்து ஆலயம் பற்றி அவர் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? எமக்கெதிராக கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடி யது தவறான தீர்மானமாகும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்