வாக்குரிமையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும்- ஏ.எல்.இஸ்ஸதீன்

வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தினால் மக்களின் பொறுப்பு கூறலில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

நல்ல தலைமைத்துவத்தினூடாக பெண்களின் உரிமைகள், பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் கருத்தரங்கொன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை பெண்கள் நிலைய முகாமையாளர்கள் ஆர்.லோகிதா மற்றும் யூ.எல். ஹபீலா ஆகியோர் தலைமையில்  நேற்று (வியாழக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், “சுயாதீனமான முறையில் நீதித்துறை இயங்குமானால் அடிமட்ட மக்களின் பிச்சினைகள் அரசியல் ரீதியாக உயர்மட்டத்தில் பேசப்படும்.

நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்தல்கள் உரிய காலத்திற்குள் சுதந்திரமாக நடைபெறவேண்டும் அப்போதுதான் நியாத்தன்மையோடு தேர்தல்கள் இடம்பெறும்.

சிவில் சமூகங்கள் வாக்குரிமைகளை வென்றெடுக்கின்ற ஒன்றாக செயற்பட வேண்டும். ஜனநாயகத்தின் திறவுகோலாக வாக்குரிமை விளங்குகின்றது.

சாதாரண பொதுமக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வாக்குரிமை இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்தினால் மக்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் விலகிகொள்ளமுடியாத நிலைமை ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்