தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

தமது கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, ஹொரவபொத்தான வீதியில் அமைந்துள்ள றோயல் கார்டன் விடுதியில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளயது.

இன்றைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உறுப்பினர்களது அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் நியாயமான தீர்வைப் பெற உதவும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்