மூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து மக்களின் சம உரிமை விடயத்தில் தாங்கள் முன்னிற்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை, அக்கரைப்பற்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அனைத்து பிரஜைகளுக்கும் தத்தமது சமய வழிபாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் உறுதிப்படுத்துவோம்.

எவருக்கும் மற்றவர்களின் மதத்தை உயர்த்தி அல்லது தாழ்த்திப் பார்ப்பதற்கு இடமளிக்க முடியாது. மாறாக மற்றையவர்களின் மதத்தை ஏனையோரரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் அனைவருக்கும் தத்தமது மதங்களை பின்பற்ற உள்ள உரிமையை நாம் உறுதிப்படுத்துவோம்.

இதேவைளை, நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தாது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய நாட்டை கட்டியெழுப்புவோம்.

நாட்டை அதாள பாதாளத்திற்கு கொண்டுசென்ற அரசியல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்.

கடந்த 19 ஆண்டுகளாக நாடாளுமன்றில் அமைதியாக இருந்த சஜித்தை விடுத்து, மக்களாகிய உங்களது பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்த என்னையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்