காரைதீவில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 02பெண்கள் உட்பட 04பேர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் கடந்த 2019-01-01 அன்று நள்ளிரவிலும் மற்றும் 2019-07-19ம் திகதியும் வீடு உடைத்து அங்கிருந்த நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன களவாடப்பட்டிருந்தது.

இச் சம்பவமானது இப் பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மாரப்பண அவர்களின் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார அவர்களின் கட்டளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அஸார் அவர்களினால் பெரும்குற்றத்தடுப்பு பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ் விசாரணைகளின் போது குறித்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை நேற்றைய தினம் சம்மாந்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது களவாடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில் அவர்கள் விற்பனை செய்த கல்முனை மற்றும் ஏறாவூர் பிரதேச கடைகளில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 02பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர்கள் குறித்த களவிற்கு உடந்தையாக செயற்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி மற்றும் பெரியநீலாவணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய இரு ஆண்நபர்கள் மண்டூர்-பாலமுனை (27வயது),ஏறாவூர் (19)வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

2019-01-01 காரைதீவு பிரதான வீதியில் கொள்ளையிட்ட 3அரை லட்சம் பெறுமதியான நகை மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மீட்கப்பட்டன.

மேலும் விஷ்னு கோயில் வீதியில் உள்ள வீட்டில் கொள்ளையிட்ட இரண்டு அரை லட்சம் பெறுமதியான நகைகளும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்க்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இக் கொள்ளை சம்பவ சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றபிரிவு உப பொலிஸ் பரிசோதகர் விஜயராஜ், பொலிஸ் சாஜன் யுனைடின் ,பொலிஸ் கொன்ஸ்தாபிள் தாஹா, பொலிஸ் உதவி படையில் உள்ள பாறுக் உள்ளிட்ட பொலிஸ் குழு அண்மைக்காலமாக இக் கொள்ளை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடாத்திவந்த நிலையில் குறித்த குழுவிற்கு நேற்று கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொள்ளை கும்பலை கைது செய்ய முடிந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர்களினால் களுவாஞ்சிக்குடி,அக்கரைப்பற்று,கழுதாவளை பிரதேசங்களில் வீடு உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்டுள்ள விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்