ஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் – அரசாங்க அதிபர் உதயகுமார்

ஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் .அந்த நாடு ஊழல் அற்றது என கணிப்பீடு செய்யப்படுகின்றதாக லீக்குவாங்யூ சிங்கப்பூரின் தந்தை குறிப்பிட்டுள்ளார். ஏன மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வுகருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை (25.) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இலஞ்சம் ஊழல் சம்பந்தமான சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இயற்றப்பட்டு நடைமுறையிலிருந்து வந்துள்ளது. இச் சட்டமானது காலத்திற்கு காலம் சிறுமாற்றங்களுடன் நடை முறைப்படுத்தப்பட்டு வருவகின்றது

பொதுத்துறையில் தேசியரீதியாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கும் விழிப்புணர்வுகளை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கான செயற்றிட்ட செயலணியினை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தேசிய செயற்றிட்டம் வகுக்கப்பட்டு 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆண்டு வரைக்கும் அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது.

இலங்கை மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் குறிப்பிடுகையில் அதிகபடியான முறைப்பாடுகள அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும் ,பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்சார்பான முறைப்பாடுகள் அடுத்துடன் காணி தொடர்பான பிணக்கு, இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் மற்றும் அரசதொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்படுகள் தான் அதிகமாக பதிவாகிவருகின்றது. அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், உதவிமாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மற்றும் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள் ,நிரு;வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் விரிவுரைகளை வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்