நாட்டில் மழையுடனான வானிலை தொடரும் – வானிலை மையம்

நாட்டில் மழையுடனான வானிலை தொடரும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வரும் நாட்களில் நாட்டின் பல இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தென் கிழக்கு பகுதி வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே வானிலை மாற்றத்துக்கான காரணமாகும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்.

கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும்.

இந்தநிலையில் ராஜாங்கனை, அங்கமுவ ஓயா, தெருருஓயா, ஆகியவற்றின் அவசரக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கேகாலை, ரத்தினபுரி மற்றும் பதுளை பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்