அக்கரைப்பற்றில் திரண்டிருந்த ஆதரவாளர்களை ஏமாற்றிய மஹிந்த

அக்கரைப்பற்றில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்ப்பார்த்து திரண்டிருந்த பொதுஜன பெரமுனவின் பெருமளவான ஆதரவாளர்களுக்கு முன்பாக சொற்ப நேரமே உரையாற்றி அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து தற்பொழுது அக்கரைப்பற்றில் நடைபெற்றுவரும் பிரச்சாரக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பெருமளவிலான ஆதரவாளர்கள் இப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஸ வெறும் ஏழு நிமிடங்கள் மாத்திரமே தமது ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றினார்.

மிக அவசர தேவை காரணமாக இரவு 7 .30 மணிக்கு முன்பாக தாம் கொழும்புக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் மஹிந்த ராஜபக்ஸ குறித்த பிரச்சார கூட்டத்தில் 7 நிமிடங்கள் வரையில் உரையாற்றிய பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறினார்.

இதனால் மஹிந்த ராஜபக்ஸவின் நீண்ட உரையினையும், பிரச்சார கூட்டத்தில் அவரின் நீடித்த பங்கேற்ப்பையும் எதிர்பார்த்து காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்