வெளியக சுய உரிமையை கோர மக்களுக்கு உரிமை உள்ளது – சிவாஜி

ஒரு நாட்டில் உள்ளக சுய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுய உரிமையை கோர மக்களுக்கு உரிமை உள்ளதென தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை)  நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டினை பிளவுபடுத்த விடமாட்டேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.

யார் நாட்டை பிளவுபடுத்துகின்றார்கள். ஒரு நாட்டில் உள்ளக சுய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுய உரிமையை கோர மக்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் சர்வதேசத்தின் தலையீடுகள் எவ்வாறு அமையும் என்றுகூட தெரியவில்லை.

எனவே இலங்கைக்குள்ளேயே தீர்வினை பெறுவதற்கு அரச தலைவர் தேர்தலில் நிற்கும் யாராக இருந்தாலும் வெற்றிபெற்ற பின்னராவது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்