பண்டாரவளை நகரசபை முதல்வர் உள்ளிட்ட பத்துப் பேர் கோட்டாபயவுக்கு ஆதரவு

பண்டாரவளை நகரசபை முதல்வர் உள்ளிட்ட பத்துப் பேர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் பண்டாரவளையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பண்டாரவளை நகரசபை முதல்வர் உள்ளிட்ட பத்துப் பேரும், கோட்டாபயவுக்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக களமிறங்கிய குழுவின் 10 உறுப்பினர்கள் பண்டாரவளை நகரசபையில் அங்கம் வகிக்கிறார்கள். அந்த குழுவின் உறுப்பினர் ஜனக நிஷாந்த ரத்னாயக்கவே முதல்வராக உள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாரள் அநுரகுமார திஸாநாயக்கவும் பிரதான போட்டியாளர்களாக காணப்படுகின்றனர்.

இவர்கள் மூவரும், ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர்.

இந்நிலையிலேயே இன்று பண்டாரவளை நகரசபை முதல்வர் உள்ளிட்ட பத்துப் பேர்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்