சுமந்திரனும் ஆனோல்ட்டும் பிரான்ஸில்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸூக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காகவே இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் உள்ள ஈழத்தமிழர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆகியோருடன் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்து சுமந்திரன் விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்