சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு இடையில் பதவிகளை பங்கிடுதல் குறித்து முக்கிய பேச்சு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையிலான கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

புதிய கூட்டணியின் முக்கியமான பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தேசிய அமைப்பாளர், பிரதி செயலாளர் முதலான பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வழங்குவதற்கு இதுவரை இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 20 கட்சிகளின் பங்கேற்புடன், எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டணிக்கான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்தக் கூட்டணியின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை புதிய கூட்டணிக்காக தெரிவுக்குழு ஒன்றும் நிறைவேற்றுக் குழு ஒன்றும் தெரிவுசெய்யப்படவுள்ளது.

நிறைவேற்று சபையில், நூற்றுக்கு 51 வீத பெருபான்மை பிரதிநிதித்துவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்