ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு -7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலை அதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விசேட உரை நிகழ்த்தவுள்ளார்

கலாநிதி ஹிஸ்புல்லாவின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார கட்டமைப்பு, முஸ்லிம்களின் சமய விவகாரம், சுகாதார வசதி வாய்ப்புக்கள், கல்வி, பள்ளிவாசல்களுக்கான விசேட திட்டம், நிர்வாக – காணி பிரச்சினைகள உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்