செஞ்சோலை மாதிரிக் கிராம குடும்பங்களுக்கு உதவி

நோர்வே புலர்வின் பூபாளம் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நமச்சிவாய மூதாளர் பேணலகத்திற்கூடாக கிளிநொச்சி மலையாளபுரம் செஞ்சோலை மாதிரிக் கிராமத்தில் உள்ள 17 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும் 25 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்று உள்ள இக் குடும்பங்களுக்கு சுமார் மூன்றரை இலட்சம் பெறுமதியான உதவிகளை முதன் முதலாக நமச்சிவாய மூதாளர் பேணலகத்தின் ஒழுங்கு படுத்தலில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்