மீண்டு வா சுஜித்! கண்ணீருடன் முழு உலகமே காத்திருப்பு

தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 23 மணித்தியாலத்திற்கும் மேலாக தொடர்கிறது.

இந்த நிலையில் குழந்தை சுஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி எடுக்கப்படுகிறது. இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 10 பேர் கொண்ட பேராசிரியர் குழு மீட்பு குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் மல்க “மீண்டு வா சுஜித்” என புகைப்படத்தை கையில் ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

சிறுவன் சுஜித்தை மீட்க தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் துவா செய்ய இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்