தற்போது அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள ரிக் எந்திரம் பழுதானால்? அடுத்த கட்ட நடவடிக்கை!

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குழந்தை 82 அடி ஆழத்திலேயே இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கும் போது, மண் சரிவு ஏற்படாமல் தடுக்க ஸ்டீல் கேசிங் பைப் இறக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து, மேலும் ஒரு ரிக் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது, ரிக் இயந்திரம் விரைவாக வந்து சேர, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை எஸ்.பி.க்கள் பாதுகாப்பளிக்க உத்தரவு

தற்போது அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள ரிக் எந்திரம் பழுதானால், ஆழ்துளை பணி இடைநிற்றல் இன்றி தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்