பல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.

மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை நாளை வவுனியாவில் நடக்கும் கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு செயலாளராக பதவியிலிருந்து நீக்கிய பின்னர் கோட்டாபய முதன்முறையாகவும், ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாகவும் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்